கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்கவல்லது. தைலாபிஷேகம் - வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள் - கடன் நிவாரணத்தை அளிக்கும்.பஞ்சகவ்யம் - ஞானம் அருளும்.பஞ்சாமிர்தம் - ஆயுள் விருத்தியை அளிக்கும்.பசும்பால் - செல்வ வளத்தை அளிக்கும்.தயிர் அபிஷேகம் - தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.நெய் அபிஷேகம் - நோயற்ற வாழ்வு தரும்.தேன் அபிஷேகம் - இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.கருப்பஞ்சாறு - வம்ச விருத்தி உண்டாகும்.பழச்சாறுகள் - தோற்றப்பொலிவைத் தரும்.இளநீர் - சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.சந்தன அபிஷேகம் - தான்ய லாபத்தையும் தேக சவுக்கியத்தையும் அளிக்கும்.விபூதி அபிஷேகம் - ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.புஷ்போதக அபிஷேகம் - ராஜ பதவியை அளிக்கும்.