கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாஸ்தாவுக்கு கோயில் அமைப்பவர்களது முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர். ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் கோயிலுக்கு அளிப்பது சாமானியமான செயலல்ல. அது சகல பாவங்களையும் போக்கவல்லது. அவர்கள் கோ லோகத்தை அடைவர். மேலும் பலவித தோஷங்களாலும் கண்டங்களாலும் அவதியுறுபவர், பகவானின் கோயிலுக்குப் பசுவையும் கன்றையும் கொடுப்பதன் மூலம் சர்வ பாப விமுக்தனாகிறார்கள். சாஸ்தாவின் கோயிலை பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைந்து அப்ஸரஸ்களால் சூழப்பட்டு ஆயிரமாண்டுகள் வாழ்வர். ஐயனின் கோயிலில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், க்ரஹ பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.