Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நடக்கும் பூஜைகள் ஐயப்பனும் பந்தள அரச குடும்பமும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சபரிமலையில் ஹரிவராசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
03:11

சபரிமலையில் ஐயப்பன் துயில் கொள்ள பாடப்படும் ‘ஹரிவராசனம் ’ பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம், சுமார் 11.30 மணி அளவில் இரவில் கடைசி நைவேத்தியமாக பானகம் படைக்கப்பட்ட பின்னர் ஐயப்பன் துயில் கொள்ள பாடப்படுகிறது. மகுடி கேட்ட நாகம் போல பக்தர்கள் மலை முழுவதும் தங்கள் செயல்களை நிறுத்தி மெய் மறந்து ஹரிவராசனம் கேட்பது வழக்கம். சன்னதியில் இருக்கும் பக்தர்கள் சரண கோஷம் தவிர்த்து. நிசப்தத்துடன் மவுனமாக நின்று இறைவன் துயில் கொள்வதைக் காண்பார்கள். இவ்வளவு சிறப்பான ஹரிவராசனத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இந்தப் பாடல் 1950 -ல் கும்பக்குடி குளத்தூரார் என்பவரால் இயற்றப்பட்டது. அந்தக் காலத்தில் ஆலப்புழா கோபால மேனன் என்னும் பக்தர் சபரிமலையிலேயே எப்போதும் இருப்பாராம். அவருக்கு ‘சபரிமலை கிடப்பான் ’ என்று பட்டப் பெயரே உண்டாம். மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியின் நண்பரானார் கோபல மேனன்.

1955-ல் தான் முதன் முதலில் சபரிமலையில் ஹரிவராசனம் ஒலித்தது. சிறந்த பக்தரான கோபால மேனன் இறந்து போனபோது அவரின் பிரிவுத்துயர் தாங்காமல் ஈஸ்வரன் நம்பூதிரி சபரிமலையில் ஹரிவராசனம் பாடினார். அந்தக் காலத்தில் அவர் இந்தப் பாடலுக்கு புல்லாங்குழலும் வாசிப்பாராம். சுமார் பத்து நிமிடங்கள் ஒலிக்கும் ஹரிவராசனம் பாடல் ஆரம்பிக்கும்போது மேல்சாந்தி உட்பட அர்ச்சர்கள் சன்னிதானத்தின் உள் இருப்பார்கள். பாடல் துவங்கியதும் ஐயப்பன் துயில் கொள்ள வசதியாக ஒவ்வொரு விளக்காக சன்னதியில் அணைக்கப்படும். அதே சமயம் ஒவ்வொரு அர்ச்சகராக ஐயப்பனை நோக்கிய வண்ணமே பின்னால் நடந்து சப்தமில்லாமல் வெளியே வருவார்கள். மிகச் சரியாக பாடலின் கடைசி வரி ஆரம்பிக்கும் போது மேல் சாந்தி கடைசி விளக்கை அணைத்து சன்னதியை விட்டு வெளியே வருவார். பாடல் முடியும்போது ஓசையின்றி நிசப்தமாக கதவைச் சாத்தி ஐயப்பன் துயில் கொள்ள வகை செய்வார்.

தற்பொழுது யேசுதாஸின் காந்தர்வக்குரலில் ஹரிவராசனம் ஒலிக்கிறது. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் உருக்கத்தோடு சபரியில் ஒவ்வொரு பக்தரும் பரவசப்பட்டு ஐயப்பனை தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டு உருகி நிற்கும் காட்சி மெய் சிலிர்ப்பதாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar