Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் ஹரிவராசனம் காவலுக்கு கருடன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐயப்பனும் பந்தள அரச குடும்பமும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
03:11

ஐயப்பனை வளர்த்த பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்போதும் சபரிமலை வருவார்கள். அதில் சில சுவையான தகவல்கள்.

பந்தள அரச குடும்பம் நமது பாண்டி நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்தது. மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போது சில காரணங்களுக்கு பயந்து புலம் பெயர்ந்து சென்றவர்களே பின்னர் கேரள மாநிலம் பந்தளத்தில் அரசாட்சி செய்தனர். பந்தள மன்னர்கள் மதச்சார்பின்மையை கடைப்பிடித்தனர். மற்ற மதத்தினருக்கு தாராளமாக தங்கள் ஆட்சியில் நிதி உதவிகள் செய்தனர்.

திப்பு சுல்தான் படையெடுப்பை தடுத்து நிறுத்தி பந்தளத்தை காத்த திருவாங்கூர் மன்னர்களுக்கு, படைச் செலவுக்கு பணம் கட்ட வழியில்லாது ஒரு காலத்தில் சபரிமலை வருவாயை ஈடு கொடுத்துள்ளனர் பந்தள மன்னர்கள்.

திருவாங்கூர் சமஸ்தானத்தோடு பந்தள ராஜ்யம் கி.பி. 1820- ல் இணைந்தது. சபரி மலைக்கு வர முடியாத மகளிர் கேரளம், செங்கணாசேரி அருகே உள்ள சிரம்பிக்கல் அரண்மனையில் மண்டல, மகர பூசை காலத்தில் திருவாபரணத்தை தரிசனம் செய்வர். அவர்களுக்கு மன்னர் விபூதி வழங்குவார்.

பந்தள அரச குலத்தின் மூத்த மன்னர் சபரிமலைக்கு வர மாட்டார். அரச குடும்பத்தின் ஆண்கள் உபநயனத்திற்கு முன்பு சபரிக்கு வரமாட்டார்கள். பெண்கள் எப்போதுமே வருவதில்லை.

அரச குடும்பத்தினர் சன்னதிக்கு நேராக நின்று தரிசனம் செய்வதில்லை. பந்தள குடும்பத்தினருக்கு பதினெட்டுப் படி ஏற இருமுடி அவசியமில்லை. அவர்கள் இருமுடி கொண்டு வருவதுமில்லை.  மகர விளக்கின் போது ஆபரணங்களுடன் பந்தளத்தின் ராஜா வருவார். ஆனால் பம்பையிலேயே தங்கி விடுவார்.  மகர விளக்கு முடிந்த மூன்றாம் நாள் மன்னர் சன்னதிக்கு வருவார். அவரை சரங்குத்தி பகுதியில் கோயில் நிர்வாகிகள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.

மேல்சாந்தி வரவேற்க, மன்னர் பதினெட்டுப் படி ஏறி வருவார். மாளிகபுரம் அருகே உள்ள ராஜமண்டபத்தில் மன்னர் தங்குவார். மறுநாள் மன்னர் சன்னதியில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளுவார். மேல்சாந்தி, தந்திரி ஆகியோருக்கு மன்னர் பரிசுகள் வழங்குவார். பூஜைகள் முடிந்த பின் மன்னர் சன்னதி அருகே தனி அறையில் தங்குவார். அடுத்த நாள் காலை மன்னரிடம் திருவாபரணங்கள் ஒப்படைக்கப்படும்.

ஆபரணங்களைப் பெற்றுக்கொண்ட மன்னர் அரண்மனைக்குக் கிளம்புமுன் சன்னதியின் உள்ளே செல்வார். அப்போது எல்லோரும் சன்னதியை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஐயப்பனும் பந்தள மன்னரும் மட்டும் சன்னதியில் இருக்கும் நேரம் உருக்கமானது. பந்தள பரம்பரைக்கும் ஐயப்பனுக்கும் மட்டுமே உரித்தான சொந்த தருணங்கள் அவை.

சிறிது நேரத்தில் பின் மேல்சாந்தி வந்து மன்னரின் உத்தரவைப் பெற்று கோயிலை மூடுவார். மன்னர் இறங்கி வந்ததும் பதினெட்டாம் படியும் மூடப்படும். சபரிமலையின் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கான சீசன் முடிவுக்கு வரும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar