பதிவு செய்த நாள்
29
நவ
2017
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஆறாம் நாள் விழா நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. 10:00 மணிக்கு சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, சமயக்குறவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.