Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமூர்த்திமலைக்கு ஐயப்ப ... காஞ்சிபுரம் வரதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவிலில் 5 ஆயிரம் தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2017
12:12

உடுமலை: உடுமலை, சக்திவிநாயகர் கோவிலில், திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, 5 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும், கிருத்திகை நட்சத்திரத்தன்று தீப திருநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, உடுமலை சுற்றுவட்டாரத்திலுள்ள கோவில்களில் தீபத்திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில், தொடர்ந்து மூன்று நாட்கள் வரை எரியும் வகையில், மெகா தீபம் ஏற்றப்பட்டது. அத்துடன் கோவில் வளாகத்தில் லிங்கம், சக்கரம், நட்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில், 5ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவன், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.குறிஞ்சேரி, ஆண்டாள் நாச்சியார் கோவிலிலும் அகல்விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு, பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் சார்பில் நாராயணியம் பாராயணம் செய்யப்பட்டது.அத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், பழநியாண்டவர்நகர் செல்வவிநாயகர் கோவில், முத்தையா கந்தசாமி லே-அவுட் சித்திவிநாயகர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar