ஒரு ஏழைப்பெண் தன் குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாமல் தவித்தாள். ஒருநாள், குழந்தைகள் பசி தாளாமல் அழுதனர். அவள் அருகில் இருந்த கடைக்குச் சென்று இரண்டு மூன்று ரொட்டிகளை கடனுக்கு கேட்டாள். கடைக்காரர் மறுத்து விட்டார். “ஐயா! என்னிடம் பணம் தான் இல்லை. ஆனால், நீர் எனக்கு ரொட்டிகளைக் கொடுத்தால், உமது வியாபாரம் செழிக்கவும், குடும்பம் நன்றாக இருக்கவும் கர்த்தரிடம் ஜெபிப்பேன். தயவு செய்து ரொட்டி தாருங்கள்,” என்றாள் அந்தத்தாய். அந்தக் கடைக்காரருக்கு ஆண்டவரிடம் நம்பிக்கையே கிடையாது. “நீ என்ன ஜெபம் செய்கிறாயோ, அதை ஒரு தாளில் எழுதிக் கொடு. அதை தராசில் வைக்கிறேன். ஒருவேளை அந்த ஜெப வார்த்தைகளுக்குபலம் அதிகமானால், அதன் எடைக்கு எடை ரொட்டி தருகிறேன்,” என்றார். அந்தப் பெண்ணும் விசுவாசத்துடன் ஜெபத்தை எழுதிக் கொடுக்க கடைக்காரர் அதை தராசில் போட்டார். இன்னொரு பக்கம் சிறு ரொட்டித்துண்டைப் போட தராசுத் தட்டு தாழவில்லை. பின், அந்த பெண் கேட்ட மூன்று ரொட்டிகளைப் போட்ட பிறகே தாழ்ந்தது. “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள்,” என்ற வசனம் மூலம், ஜெபத்தின் மூலம் நாம் கேட்பது தரப்படும் என்பது தெளிவாகிறது.