பதிவு செய்த நாள்
05
டிச
2017
01:12
சென்னிமலை: நஞ்சுண்டேசுவரர் கோவிலில் நடந்த, கார்த்திகை மாத திங்கள் வழிபாட்டில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னிமலை அருகே, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள, நஞ்சுண்டேசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடப்பது வழக்கம். இதன்படி கார்த்திகை மாத, மூன்றாவது திங்கட்கிழமையான நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்தனர். கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், அடுத்த வாரம் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்து விரதத்தை முடிப்பர்.