பதிவு செய்த நாள்
15
டிச
2011
12:12
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஐயப் பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா துவங்கியது; 19ம் தேதி யானைகள் மீது ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடக்கிறது. மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு சிவன்புரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, 21வது மண்டல மகோற்சவ விழா வும், ஐயப்ப சேவா சமிதியின் 52வது ஆண்டு விழாவும், மகா கணபதி ஹோமம், அத்தாழப் பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மாலை ஸர்ப்பபலி பூஜை, 16ம் தேதி திருவிளக்கு பூஜை, 17ம் தேதி ஐயப்ப சேவா சமிதியின் ஆண்டு விழா நடக்கிறது. மகோற்சவ ஆறாம் நாள் 18ம் தேதி காலை உற்சவபலியும், இரவு பகவான் பள்ளி வேட்டைக்கு புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19ம் தேதி காலை ஐயப்பன் ஆறாட்டும், கொடிக்கல்பறையும், மாலை மைதானம் மாரியம்மன் கோவிலிலிருந்து யானைகள் மீது ஐயப்பன் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி நிர்வாகக் குழு தலைவர் அச்சுதன் குட்டி, செயலர் சத்தியநாதன், பொருளர் சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.