ஸ்ரீரங்கம் : திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. அம்மன் திருத்தலங்களில் வெள்ளி கிழமைகள், வைணவ திருத்தலங்களில் சனிக்கிழமைகள் வைவ திருத்தலங்களில் சோமவாரம் என்ற திங்கட் கிழமைகள் விசேஷமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் சைவ திருத்தலங்களில் நடப்பது வழக்கம்.திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் நான்காம் சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு திருவானைக்கோவில் ஸ்ரீநடராஜர் சன்னதியில் 1008 சங்க வைக்கப்பட்டு புனிதநீர் நிரப்பப்பட்டது. பிறகு ஸ்வாமிகள் புனித நீரில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை மாதத்தின் கடைசி சங்காபிஷேகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமியை தரிசித்தனர்.சங்காபிஷேகத்தை தரிசிப்பது பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.