ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு, திரும்பும் யாத்திரையை மடக்கு யாத்திரை என்பர். மடக்கு என்றால் ஒடுக்குதல் என்று பொருள். சபரிமலை ஐயனிடம், நம் அகங்கார எண்ணங்களை ஒப்படைத்து, தன்னையே ஒடுக்கிக் கொண்டு திரும்ப வேண்டும். மீண்டும் ஆணவ எண்ணம் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் இதை மடக்கு யாத்திரை என்றார்கள்.