பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
நரசிங்கபுரம்: பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில்,
மூலவர், நந்தி சிலைகளுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பால் உள்ளிட்ட அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி சுவாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், நரசிங்கபுரம் சுவர்ண புரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில் களில், பூஜை நடந்தது.