பதிவு செய்த நாள்
16
டிச
2017
03:12
திருவள்ளூர்:திருவள்ளூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, விசேஷ திருமஞ்சனம் நிகழ்ச்சியுடன், துவங்கியது.
ஆண்டுதோறும், மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று, அனுமன் ஜெயந்தி கொண்டாடப் படுகிற து. திருவள்ளூர், பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா, 17ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று காலை, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பால், மஞ்சள் அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
பின், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. 16ம் தேதி காலை, 108 அனுமன் சாலிசா பாராயணம் நடைபெறும். 17ம் தேதி காலை, மூல மந்திர ஹோமம் நடைபெறும். தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். 18ம் தேதி, நரசிம்ம சுவாமிக்கும்; 19ல், கருடன்; 20ல், வராஹர்; 21ம் தேதி, ஹயக்ரீவர் ஆகியோருக்கு, சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். தினமும் மதியம், 11:00 மணியளவில், மகா தீபாராதனை நடை பெறும்.