பதிவு செய்த நாள்
18
டிச
2017
03:12
தர்மபுரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி எஸ்.வி.,ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. இதில், வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர், பஞ்ச முக அலங்காரத்தில், அருள்பாலித்தார். இதேபோல், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளி வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோவிலில், சந்தனக்காப்பு, வடை, வெற்றிலைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் உள்ள ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், அனுமந்தபுரம் அனுமந்தராய சுவாமி கோவில், குண்டுக்கல்லூர் ஆஞ்சநேயர் கோவில், இண்டூர், 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்ச நேயர் கோவில் உட்பட, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தங்கத்தேர் பிரகார உற்சவம் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி பழைய பேட்டை லட்சுமி நாராயணசுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஓசூர் - ராயக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள, பண்டாஞ்சநேய சுவாமி கோவிலில், அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 18 அடி உயரமுள்ள சுவாமிக்கு சிறப்பு பூஜை, ருத்ராபி?ஷகம், 1,008 வடமாலை சாற்றப்பட்டது. அதேபோல், டி.வி.எஸ்., நகர் அம்பாள் நகர் பகுதியில் உள்ள பக்த அனுமான் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடை மாலை அணிவிக்கப்பட்டது. ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள கீழ் கொல்லர் தெருவில், 23 அடி உயர சீதாராம் லட்சுமண சமேத ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷக அலங்காரம் செய்யப்பட்டது.