சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரம், சோமேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியையொட்டி, நேற்று, சந்தோஷ சனி பகவான் கோவிலில் மாலை, 4:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பரிகார ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. அப்போது, உற்சவர் மூர்த்தியான சந்தோஷ சனீஸ்வரர், துணைவியார் நீலதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.