பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
கோபி: கோபி பச்சமலையில் இன்று காலை, 9:00 முதல், 12:00 மணி வரை, சனிப்பெயர்ச்சி, பரிகார மகா ஹோமம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு சனி பகவானுக்கு மகா அபிஷேகம், பகல், 1:00 மணிக்கு சிறப்பு பரிகார அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடக்கிறது. பரிகார அர்ச்சனைக்காக, நேற்று வரை, 3,600 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
* கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா, இன்று காலை, விநாயகர் பூஜை, பரிகார அர்ச்சனை நடக்கிறது. நேற்று வரை, 800 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.