மேலுார்: மேலுார் அருகே திருவாதவூரில் மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோயிலான திருமறைநாதர் கோவிலில் சனிபெயர்ச்சி விழா நடைபெற்றது.இவ் விழாவில் மேலுார்,திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.விருச்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி இடம் பெயர்ந்ததும் சுரேஷ் பட்டர் தலைமையில் பால்,தயிர், விபூதி உள்ளிட்ட அபிசேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பேஷ்கார் திரவியகுமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். டி.எஸ்.பி., சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.