பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று காலை 9:59 மணிக்கு சனி பெயர்ச்சியானார். இதையொட்டி தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னமனுார்: குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. . தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபி, முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். துர்கா அக்ரோபுட் உரிமையாளர் வஜ்ரவேல், சின்னமனுார் ஸ்ரீ ராமா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் குப்தா, ஆனந்தம் பர்னிச்சர்ஸ் உரிமையாளர் மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி செய்திருந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ‘மொபைல் டாய்லட்’ வசதி செய்யப்பட்டிருந்தது. சுரபி நதிக்கரையில் பக்தர்கள் விட்ட துணிகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டதால், சிரமமின்றி நீராடி சென்றனர். 130 துப்புரவு பணியாளர்கள், 4 சுகாதார ஆய்வாளர்களை பேரூராட்சி நியமித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
*பேரூராட்சி அலுவலகம் அருகே டி.ஆர்.ஓ., பொன்னம்மாள் சென்ற வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, 10 நிமிடம் அங்கேயே நின்றது. பின்னர் போலீசார் சீரமைத்தனர்.
*மூலவர் சன்னதியில் காட்டப்பட்ட மகா தீபம் பார்க்க வி.ஐ.பி.,கள் நிற்பதை தடுக்க, கணபதி சன்னதியருகே மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் இடத்தில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்தனர்.
*தேவாரம் டிப்போவிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் அப்பகுதியிலிருந்து பக்தர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் சென்றனர். கூடலுார்: சனிப்பெயர்ச்சியை ஒட்டி கூடலுார் சிலைய சிவன் கோயிலில் சிறப்பு ேஹாமம் நடந்தது.
பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சத்சங்கம், மானசபூஜை, சனி அஷ்டோத்ர அர்ச்சனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
*கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. நவக்கிரகங்கள் பீடத்தில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் எள்தீபம், நெய் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபட்டனர். பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு ,அபிேஷக ஆராதனை நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் யாகபூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனிபகவானுக்கு சந்தனம், இளநீர், பால், பன்னீர் உட்பட வாசனை திரவியங்களுடன் அபிேஷகம் , ஆராதனை நடந்தது. பக்தர்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு அர்ச் சனை செய்யப்பட்டது. சனிபகவான் சிறப்பு அலங் காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை குருதட்சி ணாமூர்த்தி அறக்கட்டளை ஆலோசகர் செ.சரவணன், உறுப்பினர்கள் செய்தனர்.
* வரதராஜப்பெருமாள் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், பாலசாஸ்தா கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.