பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
ஹரிஹரபுரம்,ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியான, சச்சிதானந்த் சரஸ்வதிசுவாமிகள், டிச., 24ம் தேதி, சென்னைக்கு விஜயம் செய்கிறார்.கர்நாடக மாநிலம்,சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில், ஸ்ரீ மடம் எனும், ஸ்ரீஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்து உள்ளது. அப்பீடத்தின் பீடாதிபதியான, ஸ்வம்பிரகாஷ சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகள், டிச., 24ம் தேதி, சென்னைக்கு விஜயம் செய்கிறார். அன்று மாலை, 5:30 மணிக்கு, சக்ர நவாவர்ண பூஜை நடத்துகிறார். டிச.,25ம் தேதி காலை அம்பத்துார், கிருஷ்ணாபுரம், ராம் பாரதி தெருவில், காலை, 10:30 மணிக்கு, சுவாமிகள் பக்தர்களுக்கு, அருளாசி வழங்குகிறார்.மாலை, 5:30 மணிக்கு, சக்ர நவாவர்ண பூஜை நடத்துகிறார். டிச., 26ம் தேதி மாலை மந்தைவெளி, ஜெகத் நகர், நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில், பக்தர்களால் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அன்று மாலையும், மறுநாள் காலை, 10:30 மணிக்கும், சக்ர நவாவர்ண பூஜை நடத்தி, தீர்த்தப் பிரசாதம் வினியோகம் நடக்கிறது. டிச., 28 ம் தேதி அடையாறு, காந்திநகரில் உள்ள, அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு சுவாமிகள் வருகை தருகிறார். டிச., 29ம் தேதி முதல், ஜன., 9ம் தேதி வரை, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அடையாறு, பத்மநாபசுவாமி கோவிலில், தினமும் சக்ர நவாவர்ண பூஜை நடத்தி, தீர்த்தப் பிரசாதம் வினியோகிக்கிறார். - நமது நிருபர் -