திருப்புத்தூர் : திருப்புத்தூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை முன்னிட்டு, லட்சார்ச்சனை பூஜை துவக்க விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்னை விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு பூஜையும், லட்சார்ச்சனையும் துவங்கியது. ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் துவக்கி வைத்தார். டிச., 27 அன்று காலை மண்டலாபிஷேகம், இரவு சுவாமி திருவீதி உலா வரும். ஜன., 8 அன்று காலை 11 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை நிறைவடையும். ஜன.,11 அன்று மகரஜோதி யாத்திரை துவங்கும்.