சங்கராபுரத்தில் வள்ளலார் மன்றத்தில் மார்கழி பூச விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2018 12:01
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மார்கழி மாத பூச விழா நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், நாராயணன், மூர்த்தி முன்னிலை வகித்தனர். நகை அடகு பிடிப்போர் சங்க செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். தங்கவேல் அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில், அகவல் படிக்கபட்டு, உலக அமைதிக்காக பிரார்த்திக்கபட்டது. சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது. கார்த்திகேயன் நன்றி கூறினார்.