Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்: ... ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.78 லட்சம் ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரமுத்துவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைரமுத்துவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
11:01

ஸ்ரீவில்லிபுத்தூர் : ’ஆண்டாள் குறித்து, அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து, கோவில் சன்னதியில் பக்தர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வைரமுத்துவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பக்தர்கள் ; ஸ்ரீவி.,ல் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த விழாவில் ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. மடாதிபதிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு கவிஞர் வைரமுத்து அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்தார். ’அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரவேண்டும்’ என வலியுறுத்தி நேற்று கோவில் தேர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாலை மறியல்: மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர், திருக்கோஷ்டியூர் மாதவன், ஆண்டாள் சொக்கலிங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை செயலர் கோவிந்தன், பா.ஜ., நிர்வாகி சரவணதுரை உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் ஜீயர் தலைமையில் மதுரை - கொல்லம் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். பெண்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனால், 20 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. பின், ஆடிப்பூரபந்தலில் குவிந்தனர். அங்கு ஜீயர் தலைமையில் உண்ணாவிரதம் துவக்கினர். மீண்டும் போராட்டம்அவர்களிடம் கோவில் தக்கார், மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். ’ஜன.,17 க்குள் வைரமுத்து நேரில் மன்னிப்பு கோராவிட்டால்,மீண்டும் போராட்டம் நடத்தப்படும்’ என, ஜீயர் தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இ<தே போல் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை இழிவாக பேசியதாக கூறி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க வாசிகள் கண்டன பேரணி நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar