பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
மோகனூர்: மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா, வரும், 22ல் துவங்குகிறது. 23 காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றம், அபி?ஷகம்; 24 முதல், 30 வரை, காலை, அபிஷேகம், மாலை, யானை, மயில், குதிரை வாகனத்தில், சுவாமி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். ஜன., 29 மாலை, திருக்கல்யாணம்; 31 காலை, 11:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், தொடர்ந்து, தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று, சந்திரகிரகணம் என்பதால், மாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்படுகிறது. மறுநாள் காலை, அபிஷேகம், சத்தாபரணம், மாலை, குதிரை வாகனத்தில் வீதி உலா, 2 காலை, விடையாற்றி, 3ல் அன்னதானம், மயில் வாகனத்தில் உலா, 4 காலை, காவிரி ஆற்றில் திருமஞ்சனம், காவடி ஆட்டம் நடக்கிறது.