சோழவந்தான், திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் உள்ள பழமையான வரதகணபதி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது.
இக்கோயிலில் ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை மற்றும் திருப்பணிக்கான கணபதி ஹோமம், புண்ணியாகவாசனம், கலச பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கணேசா பிரம்மாஸ்ரீ சுவாமி கணபாடிகள், சாய்பாபா சேவா சமிதி நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.