சேத்துப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 02:01
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள், 10 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இதை முன்னிட்டு கடந்த, 17ல், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ராகவ பட்டாச்சாரியார் தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில், யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, சுவாமி மூல கருவறை மேலுள்ள கலசத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திரளானோர், திரவுபதி அம்மனை வழிபட்டனர்.