பதிவு செய்த நாள்
20
ஜன
2018
02:01
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர், வீர ராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம், 13ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான, தேரோட்டம் நடந்தது. காலை, 5:15 மணியளவில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராக தேருக்கு எழுந்தருளினார்.பின், காலை, 7:15க்கு தேரோட்டம் துவங்கியது. தேரடி, பஜார் வீதி வழியாக தேர் உலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை வரை தேரில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின், மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு, 10:00 மணிக்கு கோவிலுக்கு சென்றார். பிரம் மோற்சவத்தின் எட்டாம் நாளான ஜன(20) மாலை, 3:30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சன மும், இரவு, குதிரை வாகனமும் நடக்கிறது. ஜன (21) காலை, 10:00 மணிக்கு தீர்த்தவாரி நடை பெற உள்ளது.