பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அடுத்துள்ள நெகமத்தில், பழமையான நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் சுவாமி கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நெகமம் கடைவீதியில், 700 ஆண்டுகள் பழமையான நித்தீஸ்வரர்சுவாமி கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக, இக்கோவில் புதுப்பிக்கப்படாமலும், பராமரிப்பு இன்றியும் காட்சி அளிக்கிறது. கோவில் புதுப்பிக்கும் திருப்பணிக்காக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அனைத்து கட்சியினர் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் முன்னிலையில், மூன்றுக்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்தது. இதையடுத்து, நித்தீஸ்வரர் கோவிலிலமதிருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, கூட்டுப்பிரார்த்தனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. கடந்த, 20ம் தேதி சக்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத எம்பெருமாள்கோவில், கரிவரதராஜபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையும், அபிேஷகமும் நடந்தது.பிப்., 4ம் தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணி முதல் பகல், 12:30 மணி வரை மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு பகவதி சேவா குருதி பூஜை, மாலை, 7:00 மணிக்கு வேள்வி ேஹாமமும் நடக்கிறது. பிப்.,5ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமம் துவங்குகிறது. காலை, 7:00 மணி முதல், பகல், 12:30 மணி வரை திலக ேஹாமம், தோஷ பரிகாரமும் நடக்கிறது.