பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி, கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் வைர விழாவை முன்னிட்டு, நேற்று புதிய மச்சத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, கணபதி ஹோமம், கருட கொடியேற்றுதல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, புதிய தேருக்கு முதல்கால பூஜை நடந்தது. 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணி வரை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 9:00 மணிக்கு, புதிய மச்சத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, கல்யாண சீர்வரிசை ஊர்வலமும், 7:30 மணிக்கு வெங்கடேச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, சீனிவாச திருக்கல்யாணம் என்ற சொற்பொழிவும், 9:30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு தேர் நிலைபெயர்தல் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு ரதசப்தமி திருத்தேர் பெருவிழா நடக்கிறது. 25ம் தேதி காலை 6:00 மணிக்கு, வசந்த உற்சவம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு சயனோற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நல சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.