பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
வல்லக்கோட்டை: எல்லையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, வல்லக்கோட்டையில் நேற்று நடந்தது. வல்லக்கோட்டை ஊராட்சி மேட்டுத் தெருவில், எல்லையம்மன் கோவிலை, அப்பகுதி மக்கள் புதிதாக கட்டினர். இதன் கும்பாபிஷேக விழா, 18ம் தேதி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரஹஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகளுடன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில், விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.