பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
கொடுமுடி: கொடுமுடி, அண்ணா நகர் இழுப்புதோப்பு பகுதியில், ஆதி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆறு மாதங்களுக்கு முன், திருப்பணி தொடங்கியது. சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதையடுத்து, கும்பாபிஷேக பணி தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை, ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாணிக்கநாயக தண்டபாணி சிவாச்சாரியார் சர்வ சாதகத்தில், கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக புண்ய யாகம், வேதிகார்ச்சனை, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம், தீபாரதனை நடந்தது. விழா நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.