ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே.