பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று புத்திமதி கூறுவர் அருளாளர்கள். அப்படிப்பட்ட நெஞ்சம் கொண்டவனே முருகன். சூரன் மாமரமாக நின்றான். வேலால் மரத்தை இருகூறாக்கி, ஒரு பகுதியை மயிலாக்கி தனது வாகனமாக்கி கொண்டார். மற்றொரு பகுதியை, சேவலாக்கி தனக்கு கொடியாக்கி கொண்டார். இப்படி பகைவ னுக்கும் வாழ்வு கொடுத்து தன் அன்பராக்கும் பண்பு முருகனுக்கே உண்டு.