பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
கீழக்கரை: உத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டவாராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் மராமத்துப்பணி மேற்கொள்ளப்பட்டு,பிப்.1 மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து 12 கால யாகசாலை பூஜைக்கு பின்னர் நேற்று காலை 9:15 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம், பரிவார தெய்வங்களின்சன்னதியில் உள்ள கும்பங்களில் கோயில் சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு வாராகி அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு,வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ராமநாதபுரம் சமஸ்தான பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி ஆர்.பி.கே.ராஜராஜேஸ்வரி நாச்சியார் தலைமை வகித்தார்.
ராமேஸ்வரம் கோயில் தக்கார் மன்னர் குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார்,முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா,முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் த.முனியாண்டி,திவான் மகேந்திரன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் சுப்பையா, ரமேஷ் குருக்கள், அர்ச்சகர் மங்கள பட்டர், ரவிக்கந்தன் பட்டர், ஹரிஹரமூர்த்தி பட்டர், உத்தண்ட வேலு, தேவேந்திர சிவாச்சாரியார், வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் ஜோதிமணி, சிங்காரவேலு, பவுர்ணமி விழா கமிட்டி உறுப்பினர், கீழக்கரை நகர் ஜெ., பேரவை செயலாளர் வி.வி.சரவண பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் மகா வாராகி அம்மன், மங்கை மாகாளியம்மனின் வீதியுலா நடந்தது.