பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
காஞ்சிபுரம் : கூரத்தாழ்வான் கோவிலில், வேத பிரபந்த சாற்றுமறை உற்சவம், விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், கூரத்தாழ்வான் கோவில் உள்ளது; வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வானின், திருஅவதார தினமான, தை மாதம் அஸ்தம் நட்சத்திரமான நேற்று, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் கூரத்தாழ்வானுடன், மாலை, 5:30 மணிக்கு, புறப்பட்டு, கூரத்தாழ்வான் கோவிலில் எழுந்தருளினார். கோவிலில், வேதபிரபந்த சாற்றுமறை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, காலை, வரதராஜ பெருமாள் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.