பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நடந்த மஹாதேஸ்வரா சுவாமி கோவில் சிவராத்திரி தேர்த்திருவிழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, காளை மாடுகளை கட்டி தேரை இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலகோட்டை- கல்லுப்பாலம் இடையே மஹாதேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹா சிவராத்திரி தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று இரவு, 9:00 மணிக்கு ருத்ராபிஷேகம், புலிவாகன உற்சவம், மண்டப உற்சவம், மஹாதேஸ்வர சுவாமி கீதைகள், மஹாசிவராத்திரி மகிமை கதை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 6:00 மணிக்கு ருத்ராபி?ஷகம், காலை, 10:30 மணிக்கு மஹா சிவராத்திரி தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து, இரு காளை மாடுகளை கட்டி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு, 8:00 மணி முதல் அக்னிகுண்டம் நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு ருத்ராபி?ஷகம், பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.