திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, புதிய திருப்பாச்சூரில், காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில் (குளக்கரை) உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதத்தில் லலிதாம்பிகைக்கு ராஜ மாதாங்கி ஈஸ்வரி நவராத்திரி பூஜை நடைபெறுகிறது.லலிதாவிற்கு ஸ்ரீசக்ரம், வாராகிக்கு கிரி சக்ரம், ராஜ மாதாங்கிக்கு கேய சக்ரம் என, லலிதா சகஸ்ர நாமம் தெரிவிக்கிறது. இந்த தேவியின் நவராத்திரி வித்யா உபாசகர்களால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. லலிதாம்பிகா கோவிலில், இன்று துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது.