பதிவு செய்த நாள்
27
பிப்
2018
04:02
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் இந்திரவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள திருவெண்காட்டில், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதும், புராண காலத்தை சார்ந்த பழைமையானதுமான, ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிகோயில் அமைந்துள்ளது.
நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உடணீய கோயிலான இங்கு, இந்த ஆண்டின் இந்திரவிழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இத னையொட்டி, ஸ்ரீ சுவேதாண்யேஸ்வரர், அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், பாலசுப்பிரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகள், கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொ டி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கொடிமரத்தில் டணீஷபக்கொடி ஏற்றப்பட்டு, மஹா தீபாரா தனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இந்திரவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4ம் தேதி திருக்கல்யாணமும், 6ம் தேதி திருத்தேரும், 9ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற்ற உள்ளது.