பதிவு செய்த நாள்
28
பிப்
2018
02:02
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.திருப்பூர் அருகே, திருமுருகன்பூண்டியில், பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு தினமும், சூரிய சந்திர மண்டல காட்சி, பூத வாகனம், சிம்ம வாகனம், புஷ்ப விமானம் ஆகியவற்றில் ”வாசி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று சுவாமிக்கு சிறப்பு அபி@ஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. @நற்றிரவு, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருமுருகநாதசுவாமி, சோமாஸ்கந்தர் ரூபத்திலும்; முயங்குபூண்முலை வல்லியம்மை, சண்முகநாதர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், சிறப்பு அலங்காரத்திலும்; நந்தி, மயில் வாகனங்களில் எழுந்தருளினர்; பஞ்ச வாத்தியங்கள், அதிர்வேட்டு, வாண வேடிக்கைகள் முழங்க, தேர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பஞ்ச மூர்த்திகளை வழிபட்டனர். விழாவில் இன்று காலை, சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் யானை, அன்ன வாகனங்களில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. நாளை, முக்கிய நிகழ்ச்சியான, தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. மாலை, 3:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் தேரோட்டம் நடக்கிறது. வரும், 3ம் தேதி, பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா மற்றும் தெப்பத்திருவீதி உலா நடக்கிறது. வரும், 4ம் தேதி, சுந்தரர் வேடுபறி திருவிழா; 5ம் தேதி, பிரம்ம தாண்டவ காட்சி; 6ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.