வில்லியனுார், : திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, தேரோட்டத்தை சுகுமாறன் எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார். வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவில், நேற்று காலை 9:30 மணிக்கு மேல், சுகுமாறன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டததை துவக்கிவைத்தார். கோவில் வளாக மாடவீதி வழியாக தேர் வலம் வந்தது. இன்று (1ம் தேதி) காலை 6.30 மணிக்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவிலில் இன்று மாசிமக உற்சவம் நடைபெறுகிறது. இரு இடங்களிலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு ஊர் கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.