பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆற்று படித்துறையில் உள்ள சக்திக்குமரன் செந்தில் கோயிலில் மாசி மக பால்குட விழா நடந்தது.பிப்., 27 ல் ஆறுமுகப்பூச்சாற்றம் என்னும் சண்முகார்ச்சனையும்,28 ல் லக்குமணன் தலைமையில் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து முருகபக்தர்கள் பெருமாள் கோயில் வைகை ஆற்று படித்துறைக்கு சென்றனர்.அங்கு குடங்களில் பால் நிரப்பப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காலை 11:00 மணிக்குமேல் கோயிலை அடைந்தனர். பின்னர் பல்வேறு வகையான அபிேஷக, ஆராதனைகள்நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று மதியம் 12:00 மணிக்கு அன்னதான விழா நடக்கிறது. நாளை காலை செந்திலாண்டவன்மிதிவண்டி பயணக்குழு சார்பில் 42 ம் ஆண்டாக நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பயணம்செல்கின்றனர்.