திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2018 12:03
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. மாசி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான் மற்றும் தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரங்களில் வீதி உலா நடந்தது. பத்தாம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினர். முன்னதாக தேரடி மாடனுக்குசிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்தது. சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காலை 8:25 மணிக்கு நிலைக்கு வந்தது. காலை 8:35 மணிக்கு தெய்வானை அம்மன் தேர் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர் பாரதி உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். 11ம் திருவிழவான இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி சுவாமி, அம்மன் மஞ்சள் நீராட்டுடன் மாசி விழா நிறைவடைகிறது.