Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் ... மாசி மக தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர் தந்தைக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி மாசி மக தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி தேர்த்திருவிழா ஏப்., 27ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
அவிநாசி தேர்த்திருவிழா ஏப்., 27ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 மார்
2018
12:03

திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 20ல் துவங்கி மே 1ம் தேதி வரை நடக்கிறது. தேரோட்டம், ஏப்., 27ம் தேதி நடக்கிறது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவார பாடல் பெற்ற தலமாகவும், தமிழகத்தில், மூன்றாவது பெரிய தேர் கொண்டதுமான, அவிநாசி, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, தேர்த்திருவிழா, ஏப்.,20ம் தேதி, காலை, 8:00க்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அன்று இரவு, திருமுருகநாதர் அவிநாசி கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி, சூரிய சந்திர மண்டல காட்சிகள்; 22ம் தேதி, பூத வாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23ம் தேதி, புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகள்; 25ம் தேதி, கற்பக விருட்ஷ வாகனம், சுவாமி திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து, யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவில், 26ம் தேதி, அதிகாலை பூரம் நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகளும் தேர்களுக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 27ம் தேதி, காலை, பெரிய தேரும், 28ம் தேதி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் தேரோட்டமும் நடக்கிறது. அதே தினம், இரவு வண்டித்தாரை, பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி, தெப்பத்தேர், 30ம் தேதி, ஸ்ரீ நடராஜர் தரிசனம், மே 1ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் வனதுர்க்கை கோயில் எதிரே தருமபுரம் ஆதீனம் மற்றும் கர்நாடகா ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar