குரு பக்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2018 01:03
மதுரை: மதுரையில் பாரதி யுவ கேந்திரா சார்பில் வில்லிபாரதம் குறித்து திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு நடந்தது.அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்துவும் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். ராமானுஜரும், ஆதி சங்கரரும் உலகம் உய்ய வேண்டும் என பாடுபட்ட மகான்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழை வளர்க்க பாடுபட்டார்கள். சைவமும், வைணவமும் இரு கண்கள். இரண்டும் வேதாந்தத்தை வளர்க்க பாடுபட்டவை. சைவர்களும், வைஷ்ணவர்களும் ஒவ்வொருவரும் எந்த பாகுபாடும் இன்றி நடக்க வேண்டும் என்று தியாகராஜ சுவாமிகள் தன் கீர்த்தனையில் கூறியுள்ளார். ராமாயண காலத்திற்கு பிறகு தான் உருவ வழிபாடு, விக்ரக வழிபாடு வந்தது. ஒவ்வொருவருக்கும் குரு பக்தி இருக்க வேண்டும். குரு பக்தி இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம். பகவானை காட்டிலும் திருவடி உயர்ந்தது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும். அப்போது தான் பெரியவராக வளர்ந்த பிறகும் அதே சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவர், என்றார்.