பதிவு செய்த நாள்
07
மார்
2018
12:03
வால்பாறை: வாட்டர்பால் எஸ்டேட் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவிலுள்ள சக்தி மாரியம்மன் கோவில், 66ம் ஆண்டு திருவிழா, கடந்த, 2ம் தேதி காலை, 7:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் குரூப் மேலாளர் விக்ரம் குசலப்பா ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில், வரும், 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர்; அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 11ம் தேதி வரை நடக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.