பதிவு செய்த நாள்
07
மார்
2018
12:03
கோட்டூர்:கோட்டூர் - பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான, பூவோடு எடுத்தல் நிகழ்வு இன்று நடக்கிறது. கோட்டூர் - பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிங்கம், புலி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 7ம் தேதி காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, நாளை இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல், அதனை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு தேர் திருவீதி உலா நடக்கிறது. வரும், 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு வாணவேடிக்கை; 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.