பதிவு செய்த நாள்
07
மார்
2018
01:03
நாமகிரிப்பேட்டை: உரம்பு வரதாஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில், துலாபாரம் மூலம், 2.7 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், உரம்பு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மாசி மாதம், மகம் நட்சத்திரத்திற்கு அடுத்தநாள், தேரோட்டம் நடக்கும். இந்தாண்டு தேரோட்டம், கடந்த, 2ல் நடந்தது. குழந்தைகளுக்காக வேண்டிக்கொள்பவர்கள் பிரார்த்தனை நிறைவேறினால், துலாபாரம் கொடுப்பது வழக்கம். குழந்தைகளின் எடைக்கு எடை, கற்கண்டு, காசு, தானியங்களை வழங்குவர். இதில், 72 குழந்தைகளுக்கு காணிக்கை செலுத்தியுள்னர். மொத்தம், இரண்டு லட்சத்து, 78 ஆயிரத்து, 254 ரூபாய் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கையாக, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 250 ரூபாய் இருந்தது.