Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ... புவனகிரி வந்த பூவராக சுவாமி: ஏராளமானோர் தரிசனம் புவனகிரி வந்த பூவராக சுவாமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு

பதிவு செய்த நாள்

10 மார்
2018
01:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்று நாட்களாக நடந்த வெள்ளித் தேரோட்டம் நேற்று நிறைவு பெற்றது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம்,13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கோவிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம், 20ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; கடந்த, 2ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்றன. கடந்த, 3ம் தேதி கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. கடந்த, 7ம் தேதி, 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலிலிருந்து வடம் பிடிக்கப்பட்ட தேர், வெங்கட்ரமணன் வீதியில் முதல் நாள் நிலை நிறுத்தப்பட்டது. கடந்த, 8ம் தேதி, தெப்பக்குளம் வீதியில் இரண்டாம் நாள் நிலை நிறுத்தப்பட்டது.தேர் சக்கரத்துக்கு, பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று, தெப்பக்குளம் வீதி வழியாக வடம் பிடிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் தேர் நிலைக்கு சென்றது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடந்தது.இன்று, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar