புவனகிரி: மாசி மக திருவிழாவிற்காக புவனகிரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை, ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.மாசி மக திருவிழா தீர்த்தவாரிக்காக கிள்ளையில் கடந்த 2ம் தேதி ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து சுவாமி அங்கிருந்து புறப்பட்டு மாசி மக திருவிழாவிற்காக கடந்த 6ம் தேதி புவனகிரிக்கு வருகை தந்தார்.கீழ் புவனகிரி மற்றும் அக்காரத் தெருவில் உள்ள பெருமாள் கோவில்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், புவனகிரி கடைத் தெருவிற்கு ஊர்வலமாக வந்த சுவாமிக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.