உண்மை பேச வேண்டும் என சொல்லாத மகான் இல்லை. உண்மையோ, பொய்யோ எதுவானாலும் பேசுவது வாய் தானே! அது உண்மையை மட்டும் பேச வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த உறுப்பின் பெயரால் உண்மைக்கு ‘வாய்மை‘ என் பெயர் சூட்டினர் நம் முன்னோர். அதாவது வாயால் பேசுவது எல்லாம் வாய்மை(உண்மை). இதே போல, உள்ளதை பேச வேண்டும் என்பதால் எண்ணத்தின் பிறப்பிடமான மனதை ‘உள்ளம்’ என்றனர். இந்த உண்மையை உணர்ந்தவர் உள்ளதை சொல்லி, நல்லதை செய்வர். உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும் என்கிறார் மகாகவி பாரதியார்.