தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என பாண்டவர் ஐவர். இவர்களின் மனைவி திரவுபதி. மகாபாரத கதையை கேட்பவர்கள், ஐவருக்கு ஒரு மனைவியா என்ற சந்தேகம் கொள்வர். இதற்கான தத்துவ விளக்கத்தை சொல்கிறார் சின்மயானந்தர். கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐம்புலன்கள் பாண்டவர்கள். இவற்றை இயக்கும் மனமே திரவுபதி. மனம் என்னும் கருவியுடன் கண் இணைந்து உலகைக் கண்டு மகிழ்கிறது. அப்போது மற்ற நான்கு உறுப்புகளும் மனதுடன் இணைந்து வேலை செய்கின்றன. இதனால் மனம் தூய்மையை இழப்பதில்லை.